states

img

காலத்தை வென்றவர்கள் : போராளி அய்யன் காளி பிறந்தநாள்....

அய்யன் காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ல்திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.1889 முதல் அய்யன் காளி பொதுவழி உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் மணிச்சத்தத்துடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தார். 1912 இல் பட்டியல் வகுப்பு மக்களுக்குஅனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் அய்யன்காளி நுழைந்தார். அதன் பிறகு அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

1904ல் பட்டியல் வகுப்பு மக்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை வெங்ஙானூரில் ஆரம்பித்தார். 1904ல் புலையர்களுக்கு அடிப்படைக்கூலி நிச்சயிக்கப்படுவதற்காக திருவிதாங்கூர் முழுக்க ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை அய்யன்காளி ஆரம்பித்தார். 1905 ல் இந்தபோராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.1905ல் அய்யன்காளி சதானந்த சாமிகளின் உதவியுடன் சாதுஜன பரிபாலன சங்கம் என்ற பேரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் தன் மக்களுக்கான கல்வி முயற்சிகளை ஒருங்கிணைத்தார். மலையாளி மெம்மோரியல் அளித்த கோரிக்கையின்படி திருவிதாங்கூர் சட்ட சபையான ஸ்ரீமூலம் பிரஜா சபையில் ஈழவர், புலையர்போன்றோருக்கு இடமளிக்கப்பட்டது. 1911 டிசம்பர் ஐந்தாம் தேதி அய்யன்காளி பிரஜாசபையில் உறுப்பினராக ஆனார்.  1941ல் இறப்பது வரை அங்கே அவர் பணியாற்றினார்.அரசுப்பணிகளில் புலையர்களுக்கான ஒதுக்கீடுக்காக 1916ல் அய்யன்காளி குரலெழுப்பினார். 1916ல்இதற்காக சாதுஜனபரிபாலினி என்ற இதழை வெளியிட ஆரம்பித்தார்.1924ல் நாராயணகுருவின் இயக்கமும் காங்கிரஸும் இணைந்துடி.கெ.மாதவன் தலைமையில் நிகழ்த்தப்பட்ட வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அய்யன்காளி முக்கியமான பங்கு வகித்தார். வைக்கம் போராட்டத்தின் இறுதிவெற்றியாக 1936ல் ஆலயப்பிரவேச சட்டம் அமலானபோது வெற்றிவிழாவில் காந்தியுடன் அய்யன்காளியும் கலந்துகொண்டார்.அய்யன்காளி 1940ல் புலையர் மகாசபை என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார். 1941 ஜுன் 18 அன்று மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்

;