tamilnadu

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை,ஜன.4- சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப் பேட்டை- விமான நிலையத்து க்கு 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப் பட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தட பாதை நீட்டிப்பு ரூ.3,700 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தியா கராயா கல்லூரி, கொருக் குப்பேட்டை, தண்டையார் பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திரு வொற்றியூர், விம்கோ நகர் உள்பட 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்ப ட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் தண்டவாளம் சிக்னல்கள் அமைக்கும்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை - திரு வொற்றியூர் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் இறு தியில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் முதல் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

;