tamilnadu

10 ஆயிரம் மையங்களில் ஆக. 25, 26 ஆர்ப்பாட்டம்... 1ம் பக்கத் தொடர்ச்சி

தொடர்கிறது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. நீடித்து வரும் பொதுமுடக்கத்தால் வேலையிழப்பும், வாழ்வாதார இழப்பும், வறுமையும்கோடிக்கணக்கான தமிழக மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறி யாக்கியுள்ளது.

அதிமுக அரசில் ஊழல் - முறைகேடுகள் 
மக்களின் நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக,கொரோனா சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள், உணவு ஏற்பாடுகள், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை டெண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அனைத்திலும் அதிமுக அரசு ஊழல் - முறைகேடுகளில் தலைவிரித்தாடுகிறது.

கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களையும், தொழில்களையும் பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நாடு தழுவிய கிளர்ச்சி இயக்கத்தின் பகுதியாக, தமிழகத்தில் ஒருவார காலம் மக்கள் சந்திப்பும், 2020 ஆகஸ்ட் 25-26 ஆகியதேதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டமையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.மேற்கண்ட இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து கலந்து கொள்வதோடு, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கினை எதிர்த்து கண்டன குரலெழுப்பிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;