எண்ணூர், நெட்டுகுப்பம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். பள்ளி தலைமையாசிரியர் லெஸ்லி தலைமையில் மாணவர்கள் ஊர்வலமாக சென்று தாழங்குப்பம் மார்க்கெட்டில் நாடகம் நடத்தினர். மண்டல அலுவலர் இளஞ்செழியன், பூச்சிகள் வல்லுநர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.