tamilnadu

img

ரேசன் கடைகளில் ஆக.5 முதல் இலவச முகக்கவசங்கள் விநியோகம்

சென்னை:
ரேசன் கடைகளில் இலவச முகக்கவசங்கள் ஆக. 5ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.சென்னையில் திங்களன்று (ஜூலை 27) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீட்டிற்கே சென்று முகக்கவசத்திற்கான டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கனை கொண்டு சென்று 5-ந்தேதி முதல் ரேசன் பொருட்களுடன் இலவச முகக்கவசங்களை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றார்.

முன்னதாக திங்களன்று காலை ரேசன் கடைகளில் இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழகத்தில், தலைநகர் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக் கப்பட்ட மறுபயன்பாட்டுடன் கூடிய தலா 2 முககவசங்கள் வழங்க பரிசீலிக்கப்படுவதாக கூறினார்.தமிழ்நாட்டில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேசன்அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் உள்ள குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் வருகின்றனர். இதில், ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசங்கள் என்று கணக்கிட்டால், மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வழங் கப்படவேண்டும்.முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

;