tamilnadu

img

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50ஆக  உயர்வு.... பயணிகள் அதிர்ச்சி....

சென்னை:
கொரோனா வைரஸ் நோய்பரவலை அடுத்து ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர மற்றவர்களை அனுமதிக்காமல் இருந்தது. இதற்கிடையில் செவ்வாய் முதல் பயணிகளுடன் வருபவர்களையும் அனுமதிக்க முடிவு செய்து, அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசியமில்லாத பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் அதிக அளவில்மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதுபோன்ற பல்வேறு ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, ரயில் நிலையங்களில் வரும் பயணிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, சென்னையில் உள்ளரயில்நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை  சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம்போன்ற ரயில் நிலையங்களில் தற்போதுள்ள ரூ.10 நடைமேடை கட்டணம்  ரூ.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக அதிகரித்துள்ளது பயணிகள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில்: சென்னை கடற்கரை- செங்கல்பட்டுக்கே ரூ.15 தான் டிக்கெட் கட்டணமாக வசூல்செய்கின்றனர். ஆனால் பிளாட்பாரம் டிக்கெட்ரூ.50 என்று திடீரென உயர்த்தியுள்ளனர். டிக்கெட் விலை உயர்த்தினால்  யாரும் கேட்க மாட்டார்கள் என்று அவர்கள் விருப்பபடி உயர்த்தியுள்ளனர். கொரோனா தொற்று இருப்பதால் கூட்டம் வருவதை தடுப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தியதாக கூறுகின்றனர். அதற்கு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்காமலே  இருக்கலாம். தொற்று குறைந்த பிறகு வழக்கம் போல் அனுமதிக்க வேண்டியது தான். அதற்காக டிக்கெட் விலையை உயர்த்தினால் எப்படி? கொரோனா தொற்று குறைந்த பிறகு பிளாட்பாரம் டிக்கெட் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை. இதே  ரூ.50 தான் வசூல் செய்வார்கள். எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர்.

;