tamilnadu

img

ஆட்டோ தொழிலை பாதுகாக்க நிவாரணம் கேட்டு ஆக.18ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சென்னை:
ஆட்டோ தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆக.18 அன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறைகூவல் விடுத்துள் ளது.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சம்மேளனத் தலைவர் வி.குமார் தலைமையில் இணையதளம் மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே மகேந்திரன், மாநில நிர்வாகிகள் ஆர்.தெய்வராஜ், பி.என்.தேவா, சம்மேளன செயல் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் ஏ.எல். மனோகரன், துணைப் பொதுச்செய லாளர்கள் சந்திரசேகரன், சீனிவாசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று பரவல் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. ஆட்டோ தொழில் தாங்க முடியாத நெருக் கடியை சந்தித்து வருகிறது. பொதுமுடக்கத்தை அறிவித்த ஆட்சியாளர்கள், ஆட்டோ சக்கரங்கள் சாலையில் உருளவில்லையென்றால், ஓட்டுநர்களின் குடும்பங்களின் வாழ்க்கை சக்கரம் சுழலாது என்பதை உணரவில்லை.கடும் போராட்டத்திற்கு பிறகு இருவரை ஏற்றிச் செல்லலாம் என்று அரசு அறிவித்தாலும் போதிய சவாரி இல்லாததால் வருமானம் இன்றி ஓட்டுநர்கள் வறுமையில் உள்ளனர். இதன் காரணமாக கும்பகோணம், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து ஆட்டோ தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். இந்த நிலையில் டீசல் பெட்ரோல் கேஸ் விலை உயர்வானது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது.

எனவே, மத்திய மாநில அரசுகள் ஆட்டோ தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கும் மாதம் 7 ஆயிரத்து 500 வீதம் ஆறு மாத காலத்திற்கு வழங்க வலியுறத்தி ஆகஸ்ட் மாதம் 18 ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெறும்.மேலும், தற்கொலை செய்து கொண்டுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கும், வீரக்கேரளம் புதுரில் காவல் துறையால் அடித்துகொல்லப் பட்டவர் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். 

தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதோடு, பிடித்து நிறுத்தப் பட்டுள்ள ஆட்டோக்களை நிபந்தனை, அபராதம் இன்றி விடுவிக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெற வேண்டும்.கூட்டுறவு வாங்கிகள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டும், எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் முடிந்த ஆட்டோக்களுக்கு ஊரடங்கு முடிவுற்ற நாளிலிருந்து ஓராண்டு கால நீடிப்பு செய்ய வேண்டும், தனியார் மற்றும் அரசு வங்கிகளின் வாகனக் கடனுக்கான தவணைத் தொகையை கேட்டு மிரட்டுவதை தடுக்க வேண்டும்,நலவாரிய ஆன்லைன் குளறுபடிகள் சரிசெய்வதோடு, நலவாரியத்தில் பதிந்து 60 வயது பூர்த்தியடைந்து, பென்சன் பெறுபவர்களுக்கும் அரசு அறிவித்த நலவாரிய நிதி வழங்கிட வேண்டும், டீசல், பெட்ரோல், விலை உயர்வு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;