tamilnadu

img

ஆர்சானிக் ஆல்பம் ஹோமியோபதி மருந்து வழங்கல்

திருவெற்றியூர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் 5 மையங்களில் 1500 பேருக்கு வழங்கப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவொற்றியூர் எண்ணூர் பகுதி குழு - மருத்துவர் கோபிகர் அறக்கட்டளை இணைந்து இந்த முகாமை நடத்தின. மருத்துவர் சுப்பிரியா, சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆர்.ஜெயராமன், பகுதிச்செயலாளர்கள் கதிர்வேல் (திருவொற்றியூர்) ஹேமாவதி (கொளத்தூர்), மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியம், பகுதிச் செயலாளர் புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.