tamilnadu

img

தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் ஆண்டு மாநாடு

சிதம்பரம், ஜன.31- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் வரலாற்று பிரிவு  மற்றும் வரலாற்றுத் துறை சார்பில் தென்னிந் திய வரலாற்றுப் பேரவையின் 40-வது ஆண்டு  மாநாடு நடைபெற்றது.  ஜனவரி 31 முதல்  பிப்ரவரி 2 வரை மூன்று நாள் மாநாடாக  நடைபெறுகிறது. மாநாட்டிற்கு  பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார்.  கொல்கத்தா பல்கலைக்கழக வர லாற்றுப் பேராசிரியர் பந்தோபாத்யாயா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் வாழ்த்துரை வழங்கினார்.  

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அழ கப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றி பேசுகை யில், “இந்த பேரவை 1980 ல் மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக இங்கு நடை பெறுகிறது. இந்த பேரவையின் மூலம் வர லாற்றின் முக்கியதுவம் குறித்து விவாதிக்கப்  பட்டு அதனை எளிய முறையில் இளம் தலை முறையினருக்கு கற்பிக்க அனைத்து நட வடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்றார். மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக  அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200க்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.  

இந்த மாநாட்டில் தென்னிந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைப்புகளில் விவாதம் நடந்தது. தென்னிந்திய பண்பாட்டு மற்றும் வர லாற்றுச் சின்னங்களை எதிர்கால நலன்  கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டின் நிறைவு நாளில் பெங்களுரில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய  இயக்குநர் அருண் கலந்துகொண்டு உரை யாற்றுகிறார்.  மாநாட்டின் ஒருங்கிணைப்பா ளர் பேராசிரியர் ராஜன். அண்ணாமலை பல்  கலைக்கழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர்  சங்கரி ஆகியோர் மாநாட்டுக்கான அனைத்து  ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். காரைக்  குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசிரி யர் ராஜேந்திரன் உடனிருந்தார்.

;