இன்று பதவியேற்கிறார் அன்னியூர் சிவா
சென்னை, ஜூலை 15- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததையொட்டி நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.47 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. அதாவது மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர்.
இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தபால் ஓட்டுகள் தொடங்கி இறுதி சுற்று முடிவு வெளியாகும் வரைக்கும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் கைதான் ஓங்கி இருந்தது.
இறுதி சுற்றின் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார்.
இதன் மூலம் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா செவ்வாயன்று பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம், ஜூலை 15 - காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித் தார்.இம்முகாமில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்க ளுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் ஜூலை19 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொது அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கதவு எண் 189, அயத்தூர் கிராத்தில், வசிக்கும் காலம் சென்ற திரு.குப்பு பிள்ளை அவர்களின் குமாரர் ஆன திரு.ரகு அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொது மக்களுக்கு தெரிவிப்பது யாதெனில், கடந்த 1986 ஆம் ஆண்டு அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் காலம் சென்ற திரு.குள்ள நாயக்கர் அவர்களின் குமாரர்களான பூங்காவனம், குமாரர் சேகர், மற்றும் தெய்வசேகர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் இணை சார் பதிவு அலுவலகத்தில் அயத்தூர் கிராமம் நஞ்சை சர்வே எண் 176/1-ல், 0.080 செண்டுகள் கொண்ட நிலத்தில் 0.040 செண்டுகள் கொண்ட நிலத்தை மேற்படி திரு.ரகு என்கின்ற நபருக்கு கிரையம் செய்துக்கொடுத் துள்ளார்கள், மேற்படி எனது கட்சிக்காரர் திருநின்றவூரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுக்கும் போது தவறவிடப்பட்டது தற்போது தெரிய வருகிறது.
ஆகவே எனது கட்சிக்காரருக்கு பாத்தியப்பட்ட கடந்த 1986 ஆம் ஆண்டு அன்று திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் இணை சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவண எண்: 479/1986 அசல் பத்திர ஆவணம் பத்திரத்தை யாரேனும் கண்டெடுத் தாலோ அல்லது தன் வசம் வைத்திருந்தாலோ இந்த அறிவிப்பு கண்ட 10 நாட்களுக்குள் என் வசமோ அல்லது திருநின்றவூர் காவல் நிலையம் அல்லது அருகில் உள்ள காவல் துறை வசமோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி அந்த அசல் ஆவணத்தை கொண்டு யாரேனும் வில்லங்கத்திற்கு குட்படுத்தினால் அதை எவ்விதத்திலும் எனது கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஜி.கே. தமிழரசன், வழக்கறிஞர்
கதவு எண் 346/161, 3வது மாடி
தம்பு செட்டி தெரு, பாரிமுனை சென்னை-01.
செல்: 9003097738.
இன்று மின்தடை
காஞ்சிபுரம்,ஜூலை 15- சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாயன்று (ஜூலை16) மின் விநியோகம் நிறுத்தப் பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கீழம்பி, பள்ளம்பி, சிறு காவேரிபாக்கம், திம்ம சமுத்திரம், கருப்படி தட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு, ஜே.ஜே நகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரிய கரும்பூர், சித்தேரி மேடு, துலுக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் காலை - 9 மணி முதல் 5 மணி வரை மின்விநி யோகம் நிறுத்தம் செய்யப் படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.