தாம்பரத்தில் தோழர் ப.ஜீவானந்தம் நினைவு அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் அவ்வை நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி செயலாளர் ஜீ.மணிக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் இரத்தனமாலா ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் அரிமா சங்க மாவட்ட நிர்வாகி துளசிங்கம், இந்திய வங்கி அலுவலர் சங்க செயலர் ஜி.வி.மணிமாறன், கவிஞர் ஜீவபாரதி, கவிஞர் எழில் பாரதி, முனைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.