மதுரை, மார்ச் 15- திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி யின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தர விட்டது.
ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற அங்கித் திவாரியை 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். தம்மை ஜாமீனில் விடுவிக்க வேண்டு மென்று திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் திண்டுக்கல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து ஜாமீனை அனுமதிக்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் அங்கித் திவாரி மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அங்கித்திவாரியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.
“அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது சகித்துக் கொள்ள முடியாதது. அம லாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச் சாட்டை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என நீதிபதி தனது உத்தரவில் தெரி வித்துள்ளார்.