tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் போராட்டம் வெற்றி

சென்னை, ஜன 29 - ஊழியர்களின் போராட்டத்தை யடுத்து, அங்கன்வாடி ஊழியரின் தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. சென்னை பெரம்பூர் பகுதி அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி  வருபவர் அர்ச்சணா. மூன்று மாதங்களுக்கு முன்பு விசாரணை யின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மீண்டும் பணியாணை வழங்காமல் மாவட்ட திட்ட அலுவலர் இழுத்தடித்து வருவ தாக கூறி, புதனன்று (ஜன.29) தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.டெய்சி, துணைத்தலை வர் சித்திரைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துப்பேசிய மாவட்ட திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ பணியாணையை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய டெய்சி, “வளைகாப்பு நிகழ்வுக்கென்று ஒவ்வொரு திட்டத்திற்கும் அரசு 50 ஆயிரம் வழங்கியுள்ளது. அதனை 15 வட்டாரங்களுக்கு பிரித்து கொடுக் காமல் மாவட்ட அலுவலர் வைத்துள் ளார். அதுகுறித்து கேட்டால் பழிவாங்குகிறார். அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் போனசை கூட வழங்காமல் உள்ளார். காலை 8 மணிமுதல் மாலை 4.30 மணி வரைதான் பணிநேரம். ஆனால் இரவு 8 மணி வரை வேலை வாங்கு கிறார்கள். ஒரே ஊழியர் 7 மையத்தை கவனிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். தினசரி ஊழியர்களை மன உளைச் சலுக்கு உள்ளாக்கி வருகிறார். அர்ச்சணாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஆணையிடப்பட்டுள் ளது. அதை வழங்காமல் இழுத்தடித்து வந்தார். தற்போதைய போராட்டத்திற்கு பிறகே, ஆணையை வழங்கினார். எனவே, மாவட்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினர்.

;