செங்கல்பட்டு, நவ.28- காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையம் சார்பில் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில், சமூக பெருநிறுவன திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட திட்டத்தின் கீழ் மெய்யூர் குப்பம், பெருமாள் சேரி மற்றும் பெரியகாட்டு ப்பாக்கம் ஆகிய கிராமங்க ளில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க ரூ.46.15 லட்சம் நிதி ஒதுக்க ப்பட்டது. இதன்மூலம், மேற்கண்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்கப்பட்டது. இதேபோல், பட்டிபுலம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.11.68 லட்சம் மற்றும் சதுரங்கப்பட்டினம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நோயாளி களின் உறவினர்கள் காத்திருப்பதற்கான கட்டடம் அமைக்க ரூ.10.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் காத்திருப்பு அறைக்கான கட்டடம் அமைக்கப்பட்டது. மேற்கண்ட கட்டடங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய வற்றைச் சென்னை அணுமின் நிலைய இயக்கு நர் ஸ்ரீநிவாஸ் வியாழனன்று (நவ.28) திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சி புரம் மாவட்ட ஒருங்கிணை ந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சற்குணம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழந்தைகள் நல அலுவலர் ஜானகி சென்னை அணு மின் நிலைய நிறுவன சமூக பொறுப்புக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மனித ஆற்றல் மேலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.