tamilnadu

மீண்டும் அதிமுகவில் நடிகர் ராதாரவி

சென்னை, ஜூன் 12 முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நடிகர் ராதாரவி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா நடிப்பில் உருவாகி யுள்ள ‘கொலையுதிர் காலம்' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி யில் கலந்து கொண்டார் ராதாரவி. அப்போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். திரைத் துறையினர் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் கட்சியிலிருந்து தற்காலி கமாக நீக்குவதாகவும் அறி வித்தது. இந்த முடிவு வந்ததைத் தொடர்ந்து, ராதாரவி, “திமுக-வுக்கு என்னால் எந்த பாதிப்பும் வர வேண்டாம். நானே கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று அறிவித்தார்.  சிறிது காலமாக அரசியல் மேடைகளில் இருந்து விலகி யிருந்த ராதாரவி, புதனன்று (ஜூன் 12) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனிருந்தார்.  ராதாரவி, திமுகவில் இணைவதற்கு முன்னர் அதிமுக உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கட்சி சார்பில் சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பின ராகவும் ராதாரவி இருந்துள்ளார்.