சென்னை, ஜூலை 1- சிஐடியு ஒர்க்கர்ஸ் எஜூகேஷன் டிரஸ்ட் நடத்தும் நிர்மல் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவிகளை செய்துள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடை, பள்ளிக்கு தேவையான ஸ்டீல் நாற்காலிகள், பிளாஸ்டிக் நாற்காலிகள், சுவர் விசிறிகள் ஆகியவற்றை முன்னாள் மாணவர் கள் பள்ளியின் செயலாளர் அ.சவுந்தர ராசனிடம் வழங்கினர்.மேலும் ஆசிரியர் களை கவுரவித்து பாராட்டினர். வரும் காலங்களில் பள்ளியின் முன்னேற்றத்திற்கு தாங்கள் உறுதுணையாக இருந்து உதவி செய்வோம் என்றும்அவர்கள் தெரிவித்தனர். சோமசுந்தரம், பள்ளிக்குழு உறுப் பினர்கள் கு.பூபாலன், நாராயணன், மேற்பார்வையாளர் டில்லிபாபு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டயனா ஜூலியட், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.