விழுப்புரம், ஜூலை 3- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னங்குப்பம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு அரசாணை 52ன்படி நூறு நாள் வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு கிளைத்தலைவர் வி.ஆறு முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலை வர் எம்.சுப்பராயன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இதில் செயலா ளர் எம்.கோவிந்தராஜ், பொருளாளர் கே.திரு நாவுக்கரசு, பி.அய்யனார், பி.உமா, செய லாளர்கள் ஏ.தண்டபாணி, ஏ.நடராஜன், பொருளாளர்கள் ஒய்.வெங்கடேசன், ஏ. வசந்தமாலா, துணைத் தலைவர்கள் பி.நாகப் பன், எஸ்.ராஜசேகரன், துணைச் செயலாளர் கள் எஸ்.முனியம்மாள், கே.லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.