திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9, புதுச்சேரி 1 என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.