tamilnadu

img

உரிய ஆவணங்கள் தாக்கல் செய்த பிறகு வடசென்னை திமுக வேட்பாளர் மனு ஏற்பு

சென்னை, மார்ச் 28-   வடசென்னை தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்களுடைய மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (மார்ச் 28) நடைபெற்றது. அதே நேரத்தில், திமுக வேட்பாளர் கலா நிதி வீராசாமியின் மனுவில் கையொப்ப மிட்டு இருந்த நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சுரேஷ் என்பவருடைய உரிமம் காலாவதி ஆகிவிட்டதாகவும், காலாவதி ஆகிவிட்ட ஒருவரின் கையொப்பம் செல்லாது,

அதனால், கலாநிதி வீராசாமியின் மனுவை நிரா கரிக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மீது 2011இல் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை தற்போது அவர்கள் மனுவில் குறிப்பிடவில்லை எனவும் திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரி வித்ததால், அவரது மனுவையும் நிறுத்தி வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தர விட்டார்.

நிறுத்தி வைத்த மனுக்கள் மீதான விசா ரணை மதியம் 12.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 12.45 மணிக்கு அந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வின் வழக்கறிஞர் சுரேஷ், தன்னுடைய உரி மத்தை திரும்பப் பெற ஏற்கனவே விண்ணப்பித்திருக்கிறார், அது நிலுவை யில் இருக்கிறது, அதனால் அவர் கை யொப்பமிட்டது செல்லும் என அதற்குரிய ஆவணங்களை திமுக வேட்பாளர் சமர்ப்பித்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி அந்த மனுவை ஏற்பதாக அறிவித்தார். அதேபோல, அதிமுக வேட்பாளர் ராய புரம் மனோ மீது இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மீது அந்த வழக்கு இல்லை என்றும், அதற்கு உரிய ஆவணத்தைத் தாக்கல் செய்ததால் அவர் மனுவையும் ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.

;