tamilnadu

img

தடுப்புச்சுவரில் கார் மோதி நடிகர் பலி

 ஆவடி, அக் . 29- அம்பத்தூர் கொரட்டூர் பாபா நகர் 10ஆவது தெருவில் வசித்தவர் மனோமோன்வேல் (37). இவர் டி.வி சீரியல் நடிகர். இவரது மனைவி லிவியா (26). இவர்கள் திங்கட்கிழமை மதியம் காரில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்னர். பின்னர் அங்கிருந்து இரவு காரில் வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர். ஆவடி அருகே மோரை 400 அடி வெளிவட்டச் சாலையில் அவர்களது கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் நடிகர் மனோமோன்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி லிவியா காயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் லிவியாவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.