புதிய கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 25 அன்று தொடங் கிய ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை தென்சென்னை மாவட்டம், பல்லாவரம் பகுதியில் மாநிலக்குழு உறுப்பி னர் க.பீம்ராவ் தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*********************
ஆயிரம் விளக்கு பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர் இரணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.