tamilnadu

img

இயக்குநர் உத்தரவை உதாசீனப்படுத்தும் செயல் அலுவலர்:

திருவண்ணாமலை, ஜூலை 16- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் சுமார் 22 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில், சுகாதாரம் மற்றும் துப்புரவு பணியில் கடந்த 15  ஆண்டுகளாக 58 பெண்கள், 37 ஆண்  கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதியில் இருந்து 50 துப்புரவு  பணியாளர்கள் எந்தவித முன்னறி விப்பும் இன்றி செயல் அலுவலர் வாய்மொழி உத்தரவின் பேரில் பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செயல் அலுவலரின் பொறுப்பற்ற  செயலால், பணிநீக்கம் செய்யப்  பட்டுள்ள துப்புரவு பணியாளர்க ளுக்கு மீண்டும் பணி வழங்க வலி யுறுத்தி, கடந்த ஜூலை 5ஆம் தேதி  முதல், முற்றுகைப் போராட்டம், ஊர் வலம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்  தில், பணி செய்பவர்களை மாற்றுப்  பணிக்கு மேம்படுத்த வேலை வாய்ப்பு பயிற்சி, கடன் உதவி போன்  றவை இவர்களுக்கு வழங்க வில்லை.  இதுகுறித்து, துப்புரவு தொழி லாளர்கள், சிஐடியு சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியருக்கு, 15 ஆண்டு களாக பணியாற்றி வந்த 96 தொழி லாளர்களுக்கும் தொடர்ந்து பணி யாற்றிட உத்தரவு வழங்க வேண்டும்.  துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியாரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தி ருந்தனர். கடந்த வெள்ளியன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு தொழிலாளர்கள் போராட்  டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை  நகர் நிர்வாக அலுவலகத்தில் உள்ள தலைமை நிலைய இயக்குநர் எஸ்.பழனிசாமியை சந்தித்தும் மனு அளித்தனர். அப்போது இயக்குநர், தாங்கள்  யாரையும் வேலையை விட்டு நீக்க வில்லை எனவும், தொண்டு நிறுவ னங்கள் மூலமாகவும் அல்லது சுய உதவி குழுக்கள் மூலமாகவும் துப்பு ரவு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட அனை வரும் வழக்கம் போல் பணிக்கு  செல்லலாம் என்றும் உறுதி யளித்தார். பேச்சு வார்த்தையில் சிஐடியு  மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளாட்சித் துறை ஊழியர்களின் மாநில துணைச் செயலாளர் வீரா சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கணபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் தாலுக்கா செய லாளர் ஏ.இலட்சுமணன், இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுக்கா செயலாளர் சி.எம்.பிர காஷ், செங்கம் துப்புரவு பணி யாளர்கள் பொறுப்பாளர் முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இயக்குநர் உத்தர விட்டும் கூட, பணிநீக்கம் செய்யப் பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி வழங்க முன்வராத செங்கம் பேரூராட்சி செயல்அலுவலரை கண்டித்து, செவ்வாயன்று தொழிலா ளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.