tamilnadu

img

சமநிலையான ஒரு இந்தியா உருவாகும்

பிறந்தநாள் விழாவில் பாலபிரஜாபதி அடிகளார் பேச்சு

நாகர்கோவில், ஜன.21- சுவாமிதோப்புக்கு வீரமணியும் வருவார், இடதுசாரிகள் அத்தனை பேரும் வருவார்கள்.  இந்தியாவினுடைய மறுமலர்ச்சி சுவாமி தோப்பிலிருந்துதான் ஆரம்பிக்கும். தாழக்கி டப்பவர்கள் தற்காக்கப்படுவார்கள். சமநிலை யான ஒரு இந்தியா உருவாகும் என்று தனது பிறந்தநாள் விழாவில் பாலபிரஜாபதி அடி களார் கூறினார். குமரி மாவட்டம் சுவாமிதோப்பில் பாலபிர ஜாபதி அடிகளாரின் 72ஆவது பிறந்தநாள் விழா  திங்களன்று (ஜன.20) நடைபெற்றது. கேரள அரசின் தில்லி பிரதிநிதி ஏ.சம்பத், திருவனந்த புரம் மேயர் கே.ஸ்ரீகுமார், தமிழ்நாடு சிறுபான் மையினர் நலக்குழு மாநில தலைவர் எஸ்.நூர்முக மது, சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, அய்யா வைகுண்டர் பாரம்பரிய பாது காப்பு இயக்க தலைவர் என்.முருகேசன், திரா விடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி  காங்கிரஸ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர்  ஆஸ்டின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்தி பேசினர்.

பினராயி விஜயன்...

ஏற்புரையாற்றிய பாலபிரஜாபதி அடி களார் மேலும் பேசியதாவது:  நால்வர்ண சாதியத்தை இங்கே திணிக்க முயற்சிக்கிறார்கள். பாடத்திட்டத்தில் அதை  சேர்க்க வேண்டும் என்கிறார்கள். அதில் அஞ்ஞானம் இருக்கிறது. அதற்கு வலு சேர்க்கிற ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. தில்லி எதைச் சொன்னாலும்-தப்பாக இருந்தாலும்  சரி என்று சொல்கிறார்கள். அவர்கள் முரட்டுக்கா ளைக்கு பணிவதுபோல் துணிந்து செல்கிறார்கள்.  கேரள சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகி றார்கள். மக்களுக்காகத்தானே சட்டம். மக்கள் விரும்பவில்லை என்றால் விட்டுவிட வேண்டி யதுதானே. கேரள சட்டமன்றம் தெளிவாக முடிவெ டுத்திருக்கிறது. காமராஜருக்கு பிறகு எங்களுக்கு  கண்கண்ட முதல்வராக இருப்பவர் பினராயி  விஜயன் என்பதை துணிந்து கூறுவேன்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரி மைகள் இன்று பறிக்கப்படுகின்றன. அனைத்தை யும் தனியார் மயமாக்குகிறார்கள். எனக்கு சுய  மரியாதை, சுய சிந்தனை இல்லையா? அய்யா  வைகுண்டர் சொன்ன காரியத்தை இந்த வேளை யில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இல்லை யா? வலுமிக்க திருவிதாங்கூர் அரசனுக்கு எதிராக குரல் கொடுத்தவர் வைகுண்டசுவாமி என்பது உண்மையானால், நாங்கள் வாழா திருக்க மாட்டோம். 72 வயதுக்கு பிறகு நீங்கள்  அடிமையாக பவனி வருவதை பார்த்துக் கொண்டிருப்பதைவிட உங்களை கீழே இறக்குவதற்கான முழு வேலையும் செய்வோம்.  அதை செய்யவில்லையானால் எங்கள் வாழ்நாள்  வீண்நாள். நான் பிறப்பால் கம்யூனிஸ்ட், ஒரு  தேசியவாதி. இங்கே கம்யூனிஸ்ட்டுகளும் காங்கி ரஸ்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள்  இருவரும் இணைந்துதான் இன்று இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது. சுவாமிதோப்புக்கு வீரமணியும் வருவார், இடதுசாரிகள் அத்தனை பேரும் இங்கு வரு வார்கள். இந்தியாவினுடைய மறுமலர்ச்சி சுவாமி தோப்பிலிருந்துதான் ஆரம்பிக்கும். தாழக்கிடப்பவர்கள் தற்காக்கப்படுவார்கள். சமநிலையான ஒரு இந்தியா உருவாகும் . இவ்வாறு அவர் பேசினார்.  

கேரள அரசின் தில்லி பிரதிநிதி ஏ.சம்பத் வாழ்த்துரையில் கூறியதாவது:  அய்யா வைகுண்டர் சுவாமிகள் தென் இந்தி யாவை சேர்ந்தவர் என்பதாலும், கறுப்பு நிறத்தவர்  என்பதாலும் மற்ற பல ஆன்மீக தலைவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் கிடைக்காமல் போயி ருக்கலாம். இவருக்கு மட்டுமல்ல ஸ்ரீநாராயண குருவுக்கும் அப்படித்தான். இன்று சமூகத்தில் ஒருவித பீதி ஏற்படுத்தும்  சூழல் நிலவுகிறது. நாம் எல்லோரும் மனி தர்கள், இந்தியர்கள். ஒருவருக்கு ஒருவர் மோதிக்  கொள்ளும் மனநிலை நமக்கு வரக்கூடாது. இந்த நாடு நம்முடையது என்பதை மட்டும் இந்த  நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடுமை யான சூழ்நிலையை கடக்க கடுமையான முயற்சி யால் தான் முடியும். அய்யா வைகுண்ட சுவாமிகள் ஒரு தனிப்பட்ட  சமூகத்துக்கு மட்டுமான சொத்தல்ல. அதுபோல்  திருவள்ளுவர், அவ்வையார், பாரதியார், ஸ்ரீநாராய ணகுரு, வக்கம் காதர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், அபுல்க லாம் ஆசாத் போன்றவர்கள் ஏதேனும் ஒரு தனிப்பட்ட சமூகத்துக்கு மட்டுமான சொத்தல்ல. நாட்டின் சொத்து. நமது சொத்து. இங்கே பாலபிரஜா பதி சுவாமிகளின் 72 ஆவது பிறந்தநாள் விழா  கொண்டாடப்படுகிறது. அவருக்கு கேரள அரசின்  சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

;