tamilnadu

90 அவதூறு வழக்குகள் ரத்து.. முதல்வர் உத்தரவுக்கு டியுஜே நன்றி..

சென்னை:
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட 90 அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்து உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்(டி.யு.ஜே.) நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த, 2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.தமிழக முதலமைச்சரின் இந்த ஆணையை தமிழ்நாடு பத்திரியாளர்கள் சங் கம், முழுமனதோடு, வரவேற்று, தனது பாராட்டுகளையும், நன்றியினையும், முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.

இந்நிலையில், கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட, பத்திரிகையாளர்கள் மீது, தொடுக்கப்பட்ட 90 அவதூறுவழக்குகளையும், ரத்து செய்து, உத்தரவிட்டதன், மூலம், இனி வருங்காலங்களில், தமிழத்தில், பேச்சுரிமை, எழுத்துரிமை,கருத்துரிமைக்கு, எந்தஆபத்தும் வராமல் பாதுகாப்புடன் பத்திரிகைகள், ஊடகங்கள், ஜனநாயக ரீதியில் சுதந்திரத்துடன் செயல்படுவோம், என்கிறபெரும் நம்பிக்கையை முதல்வரின்  இந்த உத்தரவு வெளிப்படுத்தியுள்ளது என டி.யு.ஜே.வும், தமிழகத்தின் அனைத்து பத்திரிகையாளர்களும் திடமாக நம்புகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில்,  பி.எஸ்.டி. புருஷோத்தமன் கூறியுள்ளார்.சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.  

;