tamilnadu

7,780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: சத்யபிரத சாகு

சென்னை, ஏப்.11-தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1 லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 94 ஆயிரத்து 653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம், தொகுதிக்கு ஒன்று அமைக்க அறிவுறுத்தப்பட்டுள் ளது. மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.தேர்தலையொட்டி நடத்தப் பட்ட சோதனையில் இதுவரை ரூ.127.66 கோடி பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. இதில், ரூ.62 கோடி திருப்பி கொடுக்கப் பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4185 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்கணிப்பு வெளியிட தடை

இந்த தேர்தல்களின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட சில வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.அதன்படி, ஏப்.11 (வியாழக்கிழமை) காலை 7 மணியிலிருந்து மே 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை, கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது போன்றவை தடை செய் யப்படுகிறது.பிரச்சாரம் நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இடைப்பட்ட 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப் படுத்துவது தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

;