tamilnadu

ரூ.500 கோடியில் 60 கண் மருத்துவமனைகள்

சென்னை,டிச. 18- சென்னையில் பல ஆண்டுகளா கச் செயல்பட்டு வரும் அகர்வால் கண் மருத்துவமனை தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒருபகுதியாக ரூ.500 கோடியில் கூடுதலாக 60 கண் மருத்துவமனைகளை அமைக்க உள்ளது.  அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள அகர்வால் கண் மருத்துவமனைகளின் எண்ணி க்கை  150 ஆக அதிகரிக்கும். தற்போது உலகம் முழுவதும் 90 மருத்துவ மனைகளை இது கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டும் தற்பேது 14 மருத்துவமனைகள் உள்ளதாக வும் அடுத்த  2 முதல் 3 ஆண்டுகளில் இது 20ஆக அதிகரிக்கும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  அகர்வால் கண் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறினார்.இதன் மூலம் ஆப்பிரிக்காவில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தவுள்ளது என்றார். பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பங்கு மூலதன நிறுவனமான சிடிசி குழுமம் அகர்வால் கண் மருத்துவ மனையில் ரூ.215 கோடி முதலீடு செய்ய உள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த டீமெஸ்க் நிறுவனம் ரூ.270கோடியை முதலீடு செய்துள்ளது. சென்னை, மும்பை போன்ற முதல் நிலை நகரங்களில் மட்டு மல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் கேரளாவில் திருவனந்தபுரத்திலும் கிளைகளைத் திறந்துள்ளதாகவும் அமர் அகர்வால் மேலும் கூறினார்.