tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று... 

சென்னை 
இந்தியாவில் கொரோனா பரவும் மாநிலங்களில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பரவல் வேகம் மின்னல் வேகத்தில் தான் உள்ளது. கிராமம், நகரம், மலைப்பகுதி நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஜெட் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்போடு பலி எணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 5,958 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,97,261 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் (ஆக., 26) 118 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,839 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,606 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 3,38,060 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பினர். மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மண்டலம்.... 

இன்றைய பாதிப்பு  - 1,290 

மொத்த பாதிப்பு  - 1,29,247

;