tamilnadu

img

சென்னையில் 5 மண்டலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு

சென்னையில் உள்ள ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மற்றும் அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,974 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. தமிழகத்தில் 44,661 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 435 பேர் உயிரிழந்துள்ளனர். 24,547 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 347 பேர் உயிரிழந்துள்ளனர்; 16,671 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 66 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 42 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 3,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 25 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 3,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 51 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 3,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 2,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 61 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில் 1,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7 பேர் உயிரிழந்துள்ளனர். வளசரவாக்கத்தில் 1,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர்.