tamilnadu

img

டாடா குழுமம் அதிமுகவுக்கு 46.78 கோடி தேர்தல் நிதி 

டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை 2019-20 ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகள் தனிநபர், தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதிகளைப் பெற்று வருகிறது. அதன்படி, டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை 2019-20 ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதிமுக கடந்த நிதியாண்டில் பெற்ற மொத்த தேர்தல் நிதி பங்களிப்புகளில் தலா ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் என கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.
அதிமுக 2020 அக்டோபர் 26 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த 2019-20 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நிதி பங்களிப்பு அறிக்கையின்படி, ஐ.ஐ.டி.சி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிமுக ரூ.5.39 கோடி இரண்டு தனித்தனி காசோலைகளைப் பெற்றுள்ளது. அதிமுக 2018-19 ஆம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்தல் நிதி பங்களிப்புகளை அறிவித்துள்ளது. பாஜகவுக்கு ரூ.356 கோடியும், காங்கிரசுக்கு ரூ.55.6 கோடியும் வழங்கிய டாடாவின் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை 2018-19ல் அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் தேர்தல் நிதி பங்களிப்பை வழங்கியுள்ளது.