tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று...  4,163 பேர் குணமடைந்தனர்...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்றம், இறக்கமாக உள்ளது. 

சென்னையில் மட்டும் சற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவல் வேகம் மின்னல் வேகத்தில் உள்ள நிலையில், தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 64 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,163 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் 82 ஆயிரத்து 324 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையை பொறுத்துவரை கொரோனா பாதிப்பில் மாற்றம் இல்லாமல் உள்ளது. நேற்று 1206 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 1,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 74 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 27 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,869 பேர் குணமடைந்துள்ளனர். 

மற்ற மாவட்டங்கள்       
சென்னைக்கு அடுத்து அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள செங்கல்பட்டில் 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 219 பேரும், தூத்துக்குடியில் 195 பேரும், மதுரையில் 192 பேரும், திருநெல்வேலியில் 145 பேரும், விருதுநகரில் 143  பேரும், வேலூரில் 140 பேரும், சேலத்தில் 127 பேரும், திருச்சியில் 109 பேரும், தேனியில் 108 பேரும், கன்னியாகுமரியில் 105 பேரும், திருவண்ணாமலையில் 103 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

;