tamilnadu

img

எச்.ராஜாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த  3 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து நீக்கம்....

சென்னை:
பாஜக நிர்வாகி எச்.ராஜவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த காரைக்குடி தொகுதி நிர்வாகிகள் மூவர்கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவித்ததாகவும் கூறப் பட்டுள்ளது.

எச்.ராஜா கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டி யிட்டுத் தோற்றார். இதையடுத்து காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், மாவட்ட தலைமைக்கு கடந்த 21 ஆம் தேதி அளித்த விலகல் கடிதத்தில், எச்.ராஜா, தான் செய்த தவறுகளை மறைக்க தோல்விக்கு தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகக் கூறிஇருந்தார். 

அதைத்தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருந் தார்.இதையடுத்து, எச்.ராஜா மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகள் குறித்து சிவகங்கை மாவட்ட பாஜகநிர்வாகிகளிடம் காரைக்குடியில் வைத்து விசாரணை நடத்தினார் மாநில பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம். இதையடுத்து, காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்குமண்டல் தலைவர் பாலமுரு கன், கண்ணங்குடி மண்டல் தலைவர் பிரபு ஆகியோர் பாஜக கட்சிப் பொறுப்புகள் மட்டுமில்லாமல், அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;