கெயில் (இந்தியா)-ல் 261 பணியிடங்களுக்கான வாய்ப்பு
ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் கெய்ல்(இந்தியா)(GAIL(INDIA)) நிறுவனம் மூத்த பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பவுள்ளது. தகுதியானவர்கள் PET (Physical Endurance Test)/Skill Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கடுமையான சூழலில் பணி செய்ய வேண்டியிருப்பதால் அதற்கான உடல் தகுதி இருக்கிறதா மற்றும் அதற்கான திறன் உள்ளதா என்பதை அறியவே இந்தத் தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. http://gailonline.com என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதிகள், முன் அனுபவம், வயது வரம்பு பற்றிய முழு விபரங்களை இந்த இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 11.12.2024
விளையாட்டில் கலக்கியவரா நீங்கள்?
ஐசிஎப் (ICF)-ல் வேலை காத்திருக்கிறது
சென்னையின் உள்ள ரயில் பெட்டி கள் தயாரிக்கும் தொழிற்சா லையான ஐசிஎப்(ICF - Integral Coach Factory)ல் விளையாட்டுத் துறையில் ஜொலித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. பல்வேறு விளையாட்டுப் பிரிவு களில் 25 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதியைப் பொறுத் தவரை குறைந்தபட்சம் பத்தாம் வகுப்போடு ஐடிஐயில் ஏதாவது ஒரு பிரிவில் படித் திருக்க வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு /இளநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், எந்த விளையாட்டு களில் காலியிடங்கள் உள்ள னவோ, அவற்றில் ஏதாவ தொன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தைப் பெற்றி ருக்க வேண்டும். விண்ணப் பிப்பவரின் விளையாட்டுத் தகுதி மற்றும் அதில் செய்த சாதனைகளை அடிப்படை யாகக் கொண்டு தேர்வு செய்யப் படுவார்கள். இதற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 19, 2025 முதல் பிப்ரவரி 9, 2025 வரையில் நடைபெறும்.
பணியிடங்கள் காலியாக உள்ள விளையாட்டுகள் - கால்பந்து(ஆண்கள்), கபடி (இரு பாலர்), கூடைப்பந்து (பெண்கள்), கைப்பந்து(இரு பாலர்), தடகளம்(பெண்கள்) மற்றும் கிரிக்கெட்(ஆண்கள்),
விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் www.pb.icf.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களையும் இந்த தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
ஐடிபிஐ (IDBI) வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் 600 இளநிலை உதவி மேலாளர் பணியி டங்கள் நிரப்பப்படுகின்றன. நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களை நிரப்ப www.idbibank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
கடற்படையில் (NAVY) படிப்போடு வேலை
முப்படைகளில் ஒன்றான கடற்படையில் 10+2(பிடெக் நுழைவு) திட்டம் உள்ளது. பொறியியல் படிப்புக்கான பாடங்களை +2வில் பயின்று, ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயில விண்ணப்பிக்கலாம். 2024 ஆம் ஆண்டில் ஜேஇஇ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு இருக்கும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் எந்தவிதக் கட்டணமுமின்றி நான்கு ஆண்டு கால பி.டெக் படிப்பை கேரளாவில் எழிமலாவில் உள்ள இந்தியக் கடற்படைக் கல்லூரியில் மேற்கொள்ளலாம். படிப்பை நிறைவு செய்தவுடன் இந்தியக் கடற்படையில் அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மொத்த காலியிடங்கள் - 36
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
டிசம்பர் 20, 2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க - www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
நினைவூட்டல்
ரயில்வே (5,647 இடங்கள்),
பாரத் டைனமிக்ஸ் (150), தமிழ்நாடு பொதுப்பணித்துறை (760) ஆகியவற்றில் தொழிற்பயிற்சிப் பணியிடங்களுக்கு (அப்ரெண்டிஸ்) விண்ணப்பித்து விட்டீர்களா? விபரங்களுக்கு கடந்த வார (நவ.20)
வாய்ப்பு வாசலைப் படியுங்கள்.