கிருஷ்ணகிரியில் உள்ள புனித லூயிஸ் மருத்துவமனை, புனித அன்னால் பள்ளி, புனித ஆர்.சி. பாத்திமா ஆண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 24 பேருக்கு தலா 10,000 வீதம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஐவிடிபி நிறுவனர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.