tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆதிதிராவிடர் நலத்துறையில் 19 அறிவிப்புகள்!

சென்னை,  ஜூன் 26- தமிழ்நாடு சட் டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத்துறை மானி யக் கோரிக்கைகள்  மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், 19 புதிய அறி விப்புகளை வெளியிட்டார்.

அதன்படி “தொல்குடி புத்தாய்வுத் திட்டத்துக்கு ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கீடு,   வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ. 3 கோடி  நிதி ஒதுக்கீடு, பழங்குடியினர் வாழ்வா தாரத்தை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்  கீடு, திருப்பூர் முதலிபாளையம், ஈரோடு  ஈங்கூர் தாட்கோ தொழிற்பேட்டைகள் ரூ.50 கோடியில் புனரமைப்பு செய்யப் படும்” என்று தெரிவித்தார்.

சிறுபான்மை மகளிருக்கு 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள்

சென்னை, ஜூன் 26- சிறுபான்மை யினர் நலத்துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதத்திற் குப் பதிலளித்து அமைச்சர் செஞ்சி  மஸ்தான் பேசுகை யில்,  “சிறுபான்மை யினர் மகளிர்க்கு 2500 மின் மோட்டார் உடன் கூடிய தையல்  இயந்திரங்கள் ரூ.1 கோடியே 60 லட்சம்  செலவில் வழங்கப்படும்.

உலமாக்களுக்கு ஓய்வூதியத்  தொகை ரூ.1000-இல் இருந்து 1200 ஆக  உயர்த்தப்படும். மூக்குக் கண்ணாடி  உதவித் தொகை 500-இல் இருந்து  750 ரூபாயாக உயர்த்தப்படும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியார்களுக்கு வழங்கப்  படும் உதவித் தொகையை உயர்த்தி யும் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத்  தைச் சார்ந்த மாணவ- மாணவியருக்கு ரூ. 1000 கல்வி உதவித் தொகையும்  வழங்கப்படும். கடலூரில் சிறுபான்மை யினர் நலக் கல்லூரி மாணவிகள் விடு திக்கு ரூ. 3.96 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும். புதுக்கோட்டையில் புதிய சிறுபான்மையினர் நலக் கல்லூரி  மாணவர் விடுதி ரூ. 56 லட்சத்தில் துவங்  கப்படும்” என்றார்.

சீர் மரபினர் இயற்கை விபத்து மரண உதவித்தொகை உயர்வு அமைச்சர் தகவல்

சென்னை, ஜூன் 26- சட்டப்பேரவை யில் பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற்  றும் சீர்மரபினர் நலத்  துறை மாநில கோரி க்கை மீது விவாதம் நடைபெற்றது.

பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்  ணப்பன் புதிய அறிவிப்புகளை வெளி யிடுகையில், “பொருளாதாரத்தில் பின்  தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்  மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு திரவ பெட்ரோலிய வாழ்வு மூலம் இயங்  கும் தேர்ச்சி பெட்டிகள் வழங்கப்படும். 

ஈரோடு, தூத்துக்குடி, கடலூர், கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கல்  லூரி மாணவர்களுக்கு 2 கோடி செலவில்  தலா ஒரு விடுதி கட்டிக் கொடுக்கப்படும்.  சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய  பெருநகரங்களில் உள்ள விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த பொது சமையலறை கற்றுத் தரப்படும்.

சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்  களின் குடும்பத்திற்கு வழங்கப்படும்  இயற்கை மரண நிதி உதவித்தொகையை 20 ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தியும், விபத்தினால் ஏற்படும்  மரணத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகை ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து  25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் களுக்கான முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1200 ஆக உய ர்த்தி வழங்கப்படும். சீர் மரபினர் நல  வாரியம் மூலம் வழங்கப்படும். உதவித்  திட்டங்களை இணைய வழி சேவைகள்  மூலம் ஒருங்கிணைந்து செயலாக்கப் படும்” என்றார்.

கே.பி.அன்பழகன்  திடீர் மயக்கம்

சென்னை, ஜூன் 26- அதிமுக முன்னாள் அமைச்சர்கே.பி.  அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு  ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதை யடுத்து சட்டமன்ற வளாகத்தில் உள்ள  மருத்துவ குழுவினர் கே.பி. அன்பழ கனை பரிசோதித்தனர். அப்போது அவ ருக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரண மாக லேசான மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்த கே.பி.  அன்பழகன் அங்கிருந்து மருத்துவ மனைக்கு புறப்பட்டுச் சென்றார்.