மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 60 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது, 25 முதல் 30 லாரிகளியிலே கொண்டு வரப்படுகிறது. கனமழை பெய்து வருவதாக வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திங்களன்று ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. செவ்வாயன்று ரூ.90 முதல் ரூ.100 வரை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. ரூ.90 ஆக இருந்த சின்ன வெங்காயம் இன்று ரூ.110 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எகிப்திலிருந்து குளிரூட்டப்பட்ட நிலையில் 25 கண்டெய்னர்களில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.