tamilnadu

12ம் வகுப்பு மறுதேர்வு: இன்று ஹால் டிக்கெட்

சென்னை, ஜூலை 12- ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) ஜூலை 13 முதல் 17 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.