tamilnadu

img

இன்று தொடங்கியது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு

 சேலம், மார்ச் 13- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மாநிலம் முழுவதும் மாண வர்கள் உற்சாகமாக தேர்வை எழுதினர்.  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை  மாணவ, மாணவிகள் எழுதுவதற்கு மாவட்ட  நிர்வாகங்கள்  அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில், 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு 155 மையங்களில் நடை பெற்று வருகிறது. இதில் 39 ஆயிரத்து 273  மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரு கின்றனர். இதில், 18,830 மாணவர்களும் 20443  மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு  அறை வரைக்கும் அனுமதிப்பதற்கு முன்பாக  ஹால் டிக்கெட் பரிசோதனை செய்து  தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக் கப்படுகின்றனர். 11 பறக்கும் படை  குழுக்கள்  அமைக்கப்பட்டு மாவட்ட முழுவதும் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நிலையான கண்காணிப்பு பணி யில் 215 பேர் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று  மாணவிகள் தேர்வு எழுதுவதை பார்வை யிட்டார்.  கோவை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோவை - ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண் காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறுகையில், கோவை யில் 128 மையங்களில் 35 ஆயிரத்து 827 மாண வர்கள் தேர்வு எழுதுகின்றனர். அனைத்து முன்னேற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் 186 மாற்றுத்திறனாளி மாண வர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வழங்கப்படும். 180 பறக்கும் படையினர் ஆய்வுப் பணியில் உள்ளனர் என்றார். உதகை  நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் என மொத்தம் 85 பள்ளி களை சேர்ந்த 3 ஆயிரத்து 504 மாணவர்கள், 3 ஆயிரத்து 936 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 440 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். மாவட்டத்தில் 41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் தனித்தேர்வர்கள் தேர்வு எழுது வதற்காக ஊட்டி சிஎஸ்ஐ பள்ளி, கூடலூர்  புனித தாமஸ் பள்ளி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.  மாவட்டம் முழுவதும் 12ஆம் வகுப்பு  தேர்வுக்கான பணியில் பறக்கும் படையினர்,  வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், முதன்மை  கண்காணிப்பாளர்கள், துணை அலுவ லர்கள், நிரந்தர பறக்கும் படையினர்  சுமார் 100 பேர் ஈடுபட உள்ளனர்.

;