tamilnadu

img

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? தபால் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

பணி:

Gramin Dak Sevak (GDS), BRANCH POSTMASTER (BPM)

Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks)

காலியிடங்கள்: 2,994

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும், கணினி குறித்த அறிவு பெற்றிருப்பவராகவும், சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம்: பிபிஎம் பணிக்கு மாதம் ரூ.12,000 - 29,380, ஏபிபிஎம் பணிக்கு மாதம் ரூ.10,000 - 24,470

வயதுவரம்பு: 23.8.2023 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.8.2023

மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf