tamilnadu

img

நாளை முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயங்கும்  

நாளை முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும். வார நாட்களில் 658 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்ட அட்டவணையின்படி 100 சதவீதம் ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;