tamilnadu

img

 நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கில் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது-உயர்நீதிமன்றம்  

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.    

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்சார் படிப்புகளுக்கான நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அருகே நீர்நிலை பகுதிகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் பாம்பு, கொசு மற்றும் பூச்சிகள் அதிகரிப்பதை தடுக்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

இதுதொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு, அவற்றை அகற்றும்படி கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் எந்த ஒரு நடவடிக்கையையும் பல்கலைக்கழகம் சார்பாக எடுக்கப்படாத சூழலில் இதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை திருப்பூர் ஒன்றியம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.  

இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமெட் பல்கலைக்கழக மூத்த துணைத் தலைவர் எஸ் கரிகாலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பாக அப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பு இல்லை என தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பின்னர் நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பின் மீதான அரசின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆக்கிரமிப்பு என்று உறுதிசெய்யப்பட்டால் அதை அகற்ற எவ்வித தடையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.    

எனவே இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

;