tamilnadu

img

செங்கல்பட்டு அரசு தடுப்பூசி ஆலையை இயக்கக்கோரி வாலிபர், மாதர் சங்கம் பிரச்சாரம்

செங்கல்பட்டு,மார்ச் 1- செங்கல்பட்டில் மூடப்பட்ட மத்திய அரசின் தடுப்பூசி தொழிற்சாலையை பொதுத்துறை நிறுவனமாகத் தொடர்ந்து இயக்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  மக்கள் வரிப்பணத்தில் உயிர்காக்கும் தடுப்பூசிகளைத் தயாரிக்க அமைக்கப்பட்ட தொழிற்சாலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாலிபர் சங்கம்,  ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் சார்பில் செங்கல்பட்டு சுற்றுவட்டார கிராமங்களிலும்,தடுப்பூசி தொழிற்சாலை அமைந்துள்ள மேலேரிப்பாக்கம், திருமணி, உள்ளிட்ட கிராமங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சார இயக்கத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மபா.நந்தன் துவக்கிவைத்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழரசி, நிர்வாகிகள் இந்திரா, கலையரசி, அனுசுயா, வாலிபர் சங்க நிர்வாகிகள் பரணிவர்மன், ஜீவானந்தம், செந்தில், கார்த்திக், சதீஷ்குமார், சதீஷ்பாபு ஆகியோர் பேசினர்.  மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வா.பிரமிளா நிறைவுரையாற்றினார்.

;