tamilnadu

img

தோழர் எம்.மாணிக்கம்  நினைவு தினம் 

 சீர்காழி, செப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி வட்டச் செயலாளராக இருந்த தோழர் எம்.மாணிக்கத்தின் 15-வது நினைவு தினம் வைத்தீஸ்வரன் கோயிலில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டக் குழு உறுப்பினர் கே. நாகையா தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செய லாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி சிறப்புரையாற்றினார்.  வட்டச் செயலாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம், வட்டக்குழு உறுப்பினர்கள் சி.ராஜேந்திரன், கே.கேசவன், வி.ச. வட்ட தலைவர் எம்.கோவிந்தராஜ், மூத்த தோழர் கே.ஆர். பெருமாள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி பேசினர். இதில் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.