tamilnadu

img

சோமாலியா கார் குண்டு வெடிப்பில் 73 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியாகி உள்ளனர்.

சோமாலிய தலைநகர் மோகதிஷுவின் புறநகரில் அமைந்துள்ள அஃப்கோயி சாலையில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் அரசின் வரி அலுவலகத்தை இலக்காக கொண்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் சோதனை சாவடியில் கார்களை பரிசோதிக்கும் போது திடீரென கார் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
 

;