tamilnadu

img

இந்நாள் ஜன. 21 இதற்கு முன்னால்

1535 - ‘சுவரொட்டி விவகாரத்தால்’, சீர்திருத்தத் திருச்சபை(ப்ராட்டஸ்ட்டண்ட்) பிரிவைச் சேர்ந்த பிரெஞ்சுக் கிறித்தவர்கள், பாரிஸ் அன்னை தேவா லயத்தின்(நோட்ரே டேம் டி பாரிஸ்) முன்பாக, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். சுவரொட்டி விவகாரம் (அஃபேர் ஆஃப் த ப்ளக்கார்ட்ஸ்) என்பது, கத்தோலிக்கப் பிரிவின் வழிபாட்டு மற்றும் பிற நடைமுறைகளை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப் பட்ட நிகழ்வையும், அதைத் தொடர்ந்து, உயிருடன் எரிக்கப்பட்டது உட்பட, பல்வேறு இன்னல்கள் ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவினருக்கு இழைக்கப்பட்டதையும் குறிக்கிறது.

தூது வரும், காப்பவருமான கிறித்துவின் கடைசி இரவு உணவு நிகழ்வுக்கு முற்றிலும் மாறுபட்ட வழிபாட்டை(மாஸ்) செய்வதன்மூலம், ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குத் தவறான நடவடிக்கைகளில் கத்தோலிக்கத் திருச்சபை ஈடுபடுகிறது என்பதான பொருள்படும் தலைப்புடன் அச்சிடப்பட்டிருந்த இந்தச் சுவரொட்டிகள் பாரிசிலும், பிற மாநிலங்களின் பெரிய நகரங்களிலும், 1934 அக்டோபர் 17 இரவில் ஒட்டப்பட்டிருந்தன. கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருந்த இந்தச் சுவரொட்டிகள், மாஸ் வழிபாட்டை, மாந்திரீ கத்துடன் ஒப்பிட்டு, போப், பிஷப்கள் உள்ளிட்டவர்கள் இறை நெறிக்கெதிராகச் செயல்படு வதாகக் குற்றம்சாட்டியது.

அரண்மனைப் பகுதியிலும் ஒட்டப்பட்டிருந்த இந்தச் சுவ ரொட்டி, முதலாம் ஃப்ராங்காய்ஸ் அரசரின் படுக்கையறைக்கு எதிரிலேயும் ஒட்டப்பட்டி ருந்தது, ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவினரின்மீது அனுதாபம் கொண்டிருந்த அரசரையும் சினம்கொள்ளச் செய்தது. அதுவரை, ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவினரை இன்னல்களுக்கு உள்ளாக்குவதையும், மரண தண்டனைக்கு உள்ளாக்குவதையும் நாடாளுமன்றம் செய்தி ருந்தாலும், கிறித்தவப் பிரிவுகளுக்கிடையே சுமுக உறவை ஏற்படுத்தி, ஒன்றுபட்ட கிறித்தவமாக்க வேண்டுமென்ற நோக்கம் கொண்டிருந்த அரசரையும், இச்சுவரொட்டி கள் கத்தோலிக்கப் பிரிவினரின் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கின. சொல்லப்போனால், தன் ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் சதி என்று அரசர் அஞ்சும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்துத் தேவாலயங்களிலிருந்து பேரணிகள் நடத்தப்பட்டதுடன், ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவினருக்கு ஆதரவானவர்கள், அவர்கள்மீது அனுதாபம் கொண்டி ருந்தவர்கள் என்று அனைவரும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அப் பிரிவினர் ஆங்காங்கே கொல்லவும் பட்டனர். 1535 ஜனவரி 13இல் மற்றொரு சுவரொட்டி வெளி யிடப்பட, இவற்றை வெளியிடுவதை அரசு தடைசெய்து உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கத்தோலிக்கத்துக்கு எதிராகச் செயல்படுபவர்கள் உயிருடன் எரிக்கப்படுவார் கள் என்று திருச்சபையின் சார்பில் அறிவிக்கப்பட்டு, அதன்படி ஆறு நாட்களில்  தேவாலயத்தின் முன்பாகவே எரிக்கப்பட்டார்கள்.

- அறிவுக்கடல்

;