tamilnadu

img

இந்நாள் ஜன. 03 இதற்கு முன்னால்

250 - ரோமானியப் பேரரசிலிருந்த ஒவ்வொருவரும், ரோமானியக் கடவுள்களுக்குப் படையலிடவேண்டும் என்று பேரரசர் டெஷஸ் உத்தர விட்டார். பண்டைய ரோமானிய வழிபாட்டு முறையில், விலங்குகளையும், அரிதாக மனி தர்களையும் பலியிடும் வழக்கமிருந்தது. புனிதம் என்ற பொருளுடைய சேக்கர், ஆக்குதல் என்ற பொருளுடைய ஃபிஷியோ ஆகியவற்றிலிருந்து உருவான லத்தீன் சொல்லான சேக்ரிஃபிஷியம் என்ற லத்தீன் சொல்லிலிருந்தே, பலியிடுதலுக்கான ஆங்கிலச்சொல்லான சேக்ரிஃபைஸ் உருவானது! யூதர்களுக்கு மட்டும் விலக்களிக்கப் பட்டிருந்த இந்த உத்தரவு, குறிப்பாகக் கிறித்தவர்களுக்கு எதிராக இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

யூதர்களின் வழிபாட்டு முறைகள், ஏற்கெனவே ஒரு சமயமாக ஏற்கப்பட்டிருந்த நிலையில், புதியதான கிறித்தவம், மரபிற்கொவ்வாத, தேவைக்கு அதிக மான வழிபாடுகளைக் கொண்ட ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இதனைக் குறிக்க அவர்கள் பயன்படுத்திய சூப்பர்ஸ்ட்டிஷியோ என்ற லத்தீன் சொல்லிலிருந்தே, தற்போது மூடநம்பிக்கையைக் குறிக்கப்பயன்படும் ஆங்கிலச்சொல்லான சூப்பர்ஸ்ட்டிஷன் உருவானது. இந்த உத்தரவு நேரடியாகக் கிறித்தவர்களுக்கு மட்டும் எதிரானதாக இல்லா விட்டாலும், அவர்கள்தான் பாதிக்கப்பட்டனர். ரோமானியக் கடவுள்களுக்கு பலியிடு வதைக் கிறித்தவம் ஏற்காததால், செய்ய மறுத்த சிலர் கொல்லப்பட, பலர் கிறித்த வத்தைவிட்டு வெளியேறினர்.

ரோமப் பேரரசில், கிறித்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை கள் ரோமின் பெருந்தீயிலிருந்தே(கி.பி.64இல்) தொடங்கி, கிறித்தவர்களை இரக்கத்துடன் நடத்துமாறு கி.பி.313இல் பேரரசர் கான்ஸ்டாண்ட்டைன் உத்தரவிடும் வரை தொடர்ந்தன. பெருந்தீயை கிறித்துவர்கள் மூட்டியதாகக் குற்றம்சாட்டி, அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை நீரோ மேற்கொண்டார். கிறித்து இரண்டாம் முறை வருவார் என்று கிறித்துவர்கள் நம்பக்கூடிய, இறுதித்தீர்ப்பு நாள் வந்து விட்டதாக எண்ணி, தீயை அணைக்க முயற்சித்தவர்களுக்கு அவர்கள் இடையூறு செய்தி ருக்கக்கூடுமென்றும், அதனால், அவர்களே தீயை மூட்டியதாக ஐயம் எழுந்திருக்கலா மென்றும் பின்னாளைய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ரோமின் வழிபாட்டு முறையென்பது, ஒரு கடவுள் அல்லது மத வரையறைக்குட்பட்டதாக இன்றி, ஆண்டு முழு வதும் அரசு அறிவிக்கிற வழிபாடுகளைச் செய்வதாக இருந்த நிலையில், அவற்றுக்குக் கிறித்தவர்கள் முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் கிறித்தவம் வெறுக்கப்பட்டிருக்க லாம். நீரோவின் காலத்திலேயே கிறித்தவத்துக்கு எதிர்ப்பு உருவானாலும், பேரரசு முழுமை யும் கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல், ஆங்காங்கே நிலவிய இதனை, நாடு முழுமையிலும் செயல்படுத்தியது டெஷசின் உத்தரவுதான். பதினெட்டு மாதங்களே நடை முறையிலிருந்தாலும், படையலிட்டவர்கள் அதற்கான சான்றுகள் பெற்று, தங்களைக் காத்துக்கொள்ளச்செய்து, கிறித்தவர்களுக்கு பெரும் கொடுமையாகியது இந்த உத்தரவு. 

- அறிவுக்கடல்

;