சர் எட்மண்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டுப் புகழ்பெற்ற மலையேறுநர்; கொடையாளர் மற்றும் விமானியுமாவார். இரண்டாம் உலகப் போரில் வான்படையில் விமான ஓட்டியாகப் பங்கு கொண்டவர். 1951, 1952களில் இவரின் சோ ஒயு என்ற மலையில் ஏறும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் 1958 இல் ஹிலாரி முதன் முதலில் உலகின் தென் முனையை அடைந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் உலகின் இரு முனைகளையும் (வடமுனை, தென்முனை) அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். அதன் பின்னர் மே 29 1953ம் நாள் தனது 33ம் அகவையில் நேபாள நாட்டின் ஷெர்ப்பா இனத்தைச் சேர்ந்த மலையேறுநர் டென்சிங் நோர்கேவுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் தனது 88ம் அகவையில் இதய நோயினால் காலமானார்.
பெரணமல்லூர் சேகரன்