tamilnadu

img

ஏமனில் சவூதி கூட்டுப்படை தாக்குதல்....  25 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி

சனா 
ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரஸை விரட்டும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மேற்கு ஆசிய நாடான ஏமனில் மட்டும் வழக்கம் போல உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.

ஏமன் நாட்டின் வடகிழக்கு பகுதி மரீப் மாகாண சிர்வா மாவட்டத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான சவூதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது.  வான் வழி, தரை வழி என இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தியதால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்  25 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சிரியா, ஏமன் நாட்டு அரசுகள் தங்களது உள்நாட்டு போரை ஒத்திவைக்க ஐநா சபை கோரிக்கை விடுத்திருந்தது. அதனை கண்டுகொள்ளாமல் ஏமனில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளதால் ஐநா அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   

;