tamilnadu

img

கரோனா வைரஸுக்கு ”கோவிட்-19” என பெயரிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு ”கோவிட்-19” (COVID-19) என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் உகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 44,653 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் 24க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. 

இந்நிலையில், கரோனா வைரஸுக்கு 'கோவிட்-19’ என புதிய பெயர் ஒன்றை ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் நோய் (Corona virus disease) மற்றும் வைரஸ் பரவிய ஆண்டான 2019 ஆகியவற்றை இணைத்து கோவிட்-19 (Covid-19) என்ற புதிய பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் எந்த ஒரு புவியியல் இடத்தையோ, தனி நபரையோ, ஒரு குழுவையோ அல்லது விலங்குகளையோ குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கரோனா வைரசுக்கு கோவிட்-19 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.   
 

;