tamilnadu

img

சிறுமி தன்பெர்க்குக்கு விருது

ஸ்டாக்ஹோம், செப்.25- ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த  சூழலியல் ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் பங்கேற்றுப் பேசினார்.  மாநாட்டில் தன்பெர்க் பேசும்போது, நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீது தான் உள்ளன. எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால், நான் இப்போது சொல்கிறேன், “நாங்கள் உங் களை மன்னிக்க மாட்டோம்” என ஆவேச மாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தை கள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் ‘வாழ்வாதார உரிமை விருது’ நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது ‘மாற்று நோபல் விருது’ என்றும் அழைக்கப்படுகிறது.

;