செந்தில் தொண்டமான் பதில்
கொழும்பு, நவ.30- இலங்கையில் தமிழர் பிர தேசங்கள் இராணுவ மய மாக்கப்பட்டுள்ளதாகத் தமிழ கத்தில் வெளியிடப்படும் கருத்தா னது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் தெரிவிக்கின் றது. இந்திய வம்சாவளித் தமி ழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் செந் தில் தொண்டமான் பேட்டி ஒன் றில் இதனைக் கூறினார். தமிழகத்திற்கும், இலங்கைக் கும் இடையில் காணப்படுகின்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு ஆளும் கட்சி யுடன் தாம் இணைந்து செயற்படு வது பெரிய ஒத்துழைப்பாக அமை கின்றது எனவும் அவர் கூறினார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி யாகப் பதவி வகித்த காலத்தில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக நினைவூட்டிய செந்தில் தொண்ட மான், தான் சார்ந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மகிந்த ராஜபக்சவிற்கு அப்போது ஆதரவு வழங்கிய காரணத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி அந்த மீனவர்களை விடுதலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் கூறினார்.
அதேபோன்று அந்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை எந்தவித வழக்குகளும் இன்றி விடுதலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர் நினைவூட்டி னார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எதிர்க்கட்சியாக இருந்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகு களைக் கூட விடுவிக்க முடியாத நிலைமை இருந்ததாக அவர் கூறி னார்.